Connect with us
biggboss

Bigg Boss

BiggBossSeason7: ஆத்தி! அடுத்தடுத்த ரெண்டு ‘வைல்டு கார்டு எண்ட்ரி’ இவங்க தானா?… ‘சூடு’ பிடிக்கப்போகுது ஆட்டம்!

மொத்தமாக பதினெட்டு போட்டியாளர்களோடு களமிறங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மெதுவாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக சின்ன வீடு, பெரிய வீடு என பொதுவான பிரச்சினையாக திகழும் வீடு கான்செப்டை கையில் எடுத்து பிக்பாஸ் அடித்து ஆட ஆரம்பித்து இருக்கிறார். அனன்யா, பவா செல்லத்துரை வெளியேறியதால் கடந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்து கடைசி வரையில் போட்டியாளர்களை பீதியிலேயே இருக்க வைத்து, பின்னர் அவர்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்தார்.

தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் பிரதீப், விஷ்ணு, ஜோவிகா,விசித்ரா, மாயா என பெரும்பாலான போட்டியாளர்கள் பிக்பாஸ் திக்கி திணறும் அளவுக்கு கண்டென்ட்களை பாரி வள்ளல் போல வாரி வழங்கி வருகின்றனர். கூல் சுரேஷ், பூர்ணிமா போன்றோரும் விரைவில் இந்த வட்டத்துக்குள் வந்து நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற வைக்கலாம் என்பது வாசகர்களின் கணிப்பாக உள்ளது.இந்த நிலையில் மேலும் சில வைல்டு கார்டு எண்ட்ரிகளை களமிறக்கி ஆட்டத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்ல பிக்பாஸ் டீம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் சீரியல் நடிகை அர்ச்சனா, கானா பாடகர் பாலா என இருவரும் அடுத்தடுத்து உள்ளே செல்ல வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வாரம் எவிஷன் முடிந்த கையோடு இவர்களில் யாராவது ஒருவர் உள்ளே செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை அதிக இளம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தற்போது சீசன் கொஞ்சம் டல் அடிப்பது போல தோன்றினாலும் கூட விரைவில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக பிக்பாஸ் மாறிவிடும் என நிகழ்ச்சி தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ஒன்றிரண்டாக தற்போது சமூக வலைதளங்களில் ஆர்மிகளும் போட்டியாளர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் கண்டிப்பாக இன்னும் இரண்டு வாரங்களில் டிஆர்பி மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் பிபியையும் எகிற வைக்கும் வகையில் சீசன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள்ள வைல்டு கார்டு எண்ட்ரியாக யார் உள்ளே போனா நல்லா இருக்கும்னு நீங்க நெனைக்குறீங்க? மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Continue Reading

More in Bigg Boss

To Top