×

ஹீரோவா இனிமே தாக்குப் பிடிக்க முடியாது… மாதவன் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் மாதவன் முதன் முறையாக வில்லனாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.

 

நடிகர் மாதவன் முதன் முறையாக வில்லனாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.

அலைபாயுதே படத்தில் அறிமுகமான மாதவன் தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகராக இதுவரை இருந்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இப்போது அவர் கைவசம் நிசப்தம் மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் அவர் ஒரு தெலுங்கு படத்தில் முதன் முதலாக முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில்தான் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதற்காக அவருக்கு மிக்கபெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். ஏற்கனவே ஆயுத எழுத்து திரைப்படத்தில் ஆண்டி ஹீரொவாக நடித்த மாதவன் அதன் பின்னர் இப்போது வில்லனாக நடிக்க உள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News