Categories: Cinema News latest news throwback stories

ஹீரோக்களின் இமேஜ்களை உடைத்தெறிந்த தல.! இவரைப் பார்த்துக் கத்துக்கோங்கப்பா…

தமிழ்ப்படங்களில் பெரும்பாலும் ஹீரோக்கள் டை அடித்தோ அல்லது விக் வைத்தோ தான் நடிப்பார்கள். தங்களது வயதைக் காட்டக்கூடாது என்பதற்காகவும் எப்போதும் இளமையுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் இப்படிப்பட்ட ஜிகினா வேலைகளைச் செய்வார்கள். அது தவறல்ல.

ஆனால் அவர்களில் விதிவிலக்கு தான் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார். இவர் தனது வயது இதுதான். எனக்கு நரை விழுந்து விட்டது. எனது தோற்றம் இதுதான் என கெத்தாக உண்மையான தலைமுடியுடனும், தாடியுடனும் நடித்து அசத்துகிறார். அப்படிப் பார்த்தாலும் கூட இவர் லுக்கே தனி தான். அழகு அதிகரிக்கத் தான் செய்கிறதே தவிர குறையவில்லை.

Ennai aritnthal

என்னை அறிந்தால் படத்தில் வரும் உனக்கென்ன வேணும் சொல்லு பாடலில் இவர் நடிப்பு செம மாஸ். அழகான வயதுடையவர் என்ற பட்டமே கொடுக்கலாம். அதே பாடலில் பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே என்று ஒரு அழகான வரி வரும்.

அப்போது தலைமுடி நரைத்திருப்பதைப் பார்த்ததும், ச்ச… நமக்கும் வயசாயிடுச்சு என்று நினைத்தவாறு ஆண்களுக்கே உரிய சிறு வெட்கப்புன்னகையைப் பூக்கிறார் தல அஜீத். எவ்ளோ அழகா இருக்கும் என்று பாடலைப் பாருங்கள் தெரியும்.

ஒரே பாடலில் 4 வருட பயணம். அட அட என்ன ஒரு மாஸ் பாடல் என்று நம்மை வியக்க வைக்கிறது. ஜோத்பூரில் ஆரம்பிக்கும் பயணம் சென்னையில் முடிகிறது. பாடலும் முடிகிறது. திரைத்துறையில் ஹீரோக்களுக்கு என்று இருந்த இமேஜை உடைத்தெறிந்து நிமிர்ந்து நிற்பவர் தல அஜீத் என்று சொன்னால் மிகையில்லை.

Published by
sankaran v