×

தயவுசெஞ்சு விட்டுடுங்கப்பா... ஒரே மாதிரியான வாய்ப்பால் பதறும் நடிகை

தமிழில் நம்பர் ஒன் நடிகையின் படத்தில் நடித்ததால், அதேபோன்ற வாய்ப்புகளே தொடர்ந்து வருகிறது என்று நடிகை ஒருவர் புலம்பி வருகிறாராம்.
 
தயவுசெஞ்சு விட்டுடுங்கப்பா... ஒரே மாதிரியான வாய்ப்பால் பதறும் நடிகை

ஹீரோயினை மையப்படுத்தி நம்பர் ஒன் நடிகை நடித்த படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் அந்த நடிகை. குழந்தைக்குத் தாயாக நடித்திருந்தாலும் அவர் இளம் வயது நடிகை. அந்தப் படத்தில் நம்பர் ஒன் நடிகைக்கு இணையாக அவரது கேரக்டர் பேசப்பட்டது. 

கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த அந்த நடிகை, தனது கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்ததால், அவரது நடிப்பு பரவலாகக் கவனம் பெற்றது. தமிழில் முதல் படத்துக்கே நல்ல வரவேற்புக் கிடைத்தால் நடிகை அகம் குளிர்ந்து போனாராம். ஆனால், அதன்பிறகு அவர் பெரிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 

என்னவென்று விசாரித்தால், நம்பர் ஒன் நடிகையின் படத்தில் குழந்தைக்குத் தாயாக நடித்திருந்ததால், தொடர்ச்சியாக அதேபோன்ற பட வாய்ப்புகளே வந்திருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நடிகை இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஸ்டிரிக்டாக முடிவெடுத்துவிட்டாராம். அதுபோன்ற கதாபாத்திரங்களோடு வரும் இயக்குனர்களிடம் தயவு செஞ்சு விட்டுடுங்கப்பா என்று கெஞ்சாத குறையாகத் திருப்பி அனுப்பி வைக்கிறாராம். மற்ற நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிக்கத் தயார் என்று அம்மணி வெயிட்டிங்கில் இருக்கிறாராம். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News