×

விஜய் சேதுபதியை பார்த்து சூடு போடும் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஆர்யா - வொர்க் ஆவுட் ஆகுமா?... 

 
விஜய் சேதுபதியை பார்த்து சூடு போடும் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஆர்யா - வொர்க் ஆவுட் ஆகுமா?...

தமிழ் சினிமாவில் பல பேர் வில்லனாக நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்கள் சிலர்தான். நம்பியார், எம்.ஆர்.ராதா, சத்தியராஜ், ரகுவரன், பிரகாஷ்ராஜ் என சிலர் மட்டுமே வில்லனாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள். இதில் முக்கிய விஷயம் என்னவெனில் இவர்கள் எல்லோருமே குணச்சித்திர வேடத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியவர்கள். 

சில நடிகர்கள் மட்டுமே கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து மனதை கவர்பவர்கள். தற்போது அதில் முதலிடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் அவர் காட்டிய அசத்தலான நடிப்பு ‘விஜயை விட விஜய்சேதுபதி கேரக்டர் சூப்பரா இருக்கு’ என பாமர ரசிகனை கூற வைத்தது. அப்படத்தில் விஜயை விட அவர் பேர் வாங்கினார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு விஜய்சேதுபதியின் நடிப்பு முக்கிய காரணமாக இருந்ததை மறுக்க முடியாது. இதனால் கடுப்பான விஜய் ‘ விஜய் சேதுபதி போன்ற  முன்னணி நடிகர்களை என் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வேண்டாம். வில்லன் நடிகர்களை மட்டும் போடுங்கள்’ என லோகேஷ் கனகராஜிடம் கூறும் அளவுக்கு சென்றது.

இதைப்பார்த்த பல ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கும் ஆசை வந்துள்ளது. கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க ராகவாலாரன்ஸிடம் பேசப்பட்டது. அதில் நடிக்க அவருக்கு ஆசை இருந்தாலும், கால்ஷூட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை. எனவே, நடிப்பு அசுரன் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விஷால் நடித்து வரும் ‘எனிமி’ திரைப்படம் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல், பஹீரா என்கிற திரைப்படத்தில் பெண்களை வேட்டையாடும் சைக்கோ வில்லனாக பிரபுதேவா நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் மொட்டையெல்லாம் போட்டார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. 

விஜய்சேதுபதியை பார்த்து நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை வந்திருக்கிறது சரி. ஆனால், அவர் போல் பேர் வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கமெண்ட் செய்யுங்கள்!...
 

From around the web

Trending Videos

Tamilnadu News