×

ஏ விஜய் உன்கிட்ட இருக்கறது எல்லாம் அஜித்தோடது!... விஜய் ரசிகர்களை சீண்டிய மீரா மிதுன்..

நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். கடந்த சில நாட்களாகவே  நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.
 

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே மீராமிதுனுக்கு அறிவுரை கூறினர். ஆனாலும், அவர் அடங்கவில்லை.தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.

வழக்கமாக டிவிட்டரில் சண்டை போட்டுக்கொள்ளும்  விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மனம் மாறி ##AjithVijayPRIDEOfINDIA என்கிற ஹேஷ்டேக்கில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின்  புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இது அஜித்திற்கு தெரியுமா விஜய்? கண்டிப்பாக அஜித் இந்தியாவின் பெருமைதான். நீங்கள் உங்களின் உண்மையான இமேஜை இழந்துவிட்டீர்கள். மேலும் அஜித்தின் இமேஜ் மற்றும் புகழை திருடி வாழ்ந்து வருகிறீர்கள். அதுதான் கோலிவுட் மாபியா’ என பதிவிட்டுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News