ஷாருக்கான், சல்மான் கான், யஷ் எல்லாம் பிஸி!.. கவினுக்கு காது குத்திய நயன்தாரா!..
கவின் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை ரசிகர்களிடம் வித்தியாசமான முறையில் கவினும் நயன்தாராவும் இணைந்து வெளியிட்டுள்ள புரமோஷன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நயன்தாரா தனது செல்போனை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவரது போனை கவின் பிடுங்கி, ஷாருக்கான், சல்மான்கான், யஷ் இதில் யாருக்காவது போன் செய்து நம்ம படத்தோட ட்ரெய்லரை ரிலீஸ் பண்ண சொல்லுங்க என நகைச்சுவையாக கூறுகிறார்.

அதற்கு நயன்தாரா, அதெல்லாம் வேண்டாம் அவங்க பிஸியாக இருப்பாங்க, நம்ம படம் தானே, நாமே பண்ணலாம் என பதிலளிக்கிறார். இதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்ற தகவலை ரசிகர்களுக்கு அறிவிக்கின்றனர். இந்த கலகலப்பான வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘ஹாய்’ படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிரபு, ராதிகா சரத்குமார், கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
மேலும் ஹாய் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் புரமோஷன் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இன்று வெளியாகும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.