Categories: Cinema News latest news

ஜெயிலர் டிரெய்லரில் இதெல்லாம் கவனிச்சீங்களா.. குறியீடுகளை வச்சே முழு கதையும் சொல்லிடலாம்!…

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லர் கிட்டத்தட்ட 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வழக்கமான நெல்சன் படத்தின் ஸ்டைலோடு, ரஜினிக்கான மாஸ் விஷயங்களும் இந்த ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ளது என்று பலர் கூறி வருகின்றனர். இந்த படம் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனால் ட்ரெய்லரில் தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இடம்பெறவே இல்லை. ஒருவேளை அவர்களின் கதாப்பாத்திரம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க- எப்பா கிணத்த காணோம்பா கதையால போச்சு! நம்ப வச்சு ஏமாத்திட்டாரே நெல்சன்?

இந்த நிலையில் நேற்று வெளியான ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு பல விஷயங்களை கூறியுள்ளார். இந்த ட்ரெயிலர் படம் குறித்த நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. அந்த ட்ரெயிலரின் ஓப்பனிங்கிலேயே ஹாலிவுட் படத்தை போல ஒரு ராக்கெட்டை காட்டுகிறார்கள். படத்தின் கதையை பொருத்த வரை, ஒரு பெரிய ரவுடி கும்பலின் தலைவன் ஜெயிலில் இருக்கிறார்.

அந்த நபரை வெளியே கொண்டு வர முயற்சி நடக்கிறது. ஆனல் அங்கு ஜெயிலராக இருப்பர் ரஜினி தான். இது தான் படத்தின் கதை என்று பல நாட்களாக பேசப்பட்டு வந்தது. ட்ரெயிலரில் இந்த நோய் இருப்பவர்கள் பூனையாக இருந்து புலியாக மாறுவார்கள் என்று ட்ரெயிலரில் ஒரு வசனம் வருகிறது.

எனவே, சாந்தமாக அமைதியாக இருக்கும் ரஜினி கோபமாக, வீரனாக மாறுவார். வழக்கமான ரஜினி படம் போல மாஸாக இருக்கும். இந்த ட்ரெய்லரில் ஒரு மேப் காட்டப்படும். அது உத்தர பிரதேச மாநிலத்தின் மேப். மேலும் இந்த படத்தில் அவர் ஜெயிலர் அல்ல. ஐபிஎஸ் அதிகாரி என்றும் செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

இதையும் படிங்க- விஷால் சரியான விஷம்.. இதனாலதான் சண்டையே வந்துச்சி.. கோபத்தில் வெடித்த அப்பாஸ்!..

prabhanjani
Published by
prabhanjani