×

இதயத்தைத் தொட்ட சினிமாக்களை இயக்கிய இயக்குனர் இமயம் 

 
bh2

பாரதி ராஜாவின் படங்கள் என்றாலே நமக்கு மண்ணின் மணம் தான் வீசும். ஒரு காலத்தில் இருகரம் கூப்பி என் இனிய தமிழ் மக்களே என கரகர குரலில் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்தார். அது இன்று வரை தொடர்கிறது. 

அவரது வெற்றிக்கு அவரது தீராத சினிமா மோகம் என்றே சொல்ல வேண்டும். கதையின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. அவரைப் பொறுத்தவரை கதைதான் முதல் நாயகன். அதன்பிறகு தான் கதாநாயகன். கதைக்காகவே கதாநாயகனைத் தேடுவார். கதாநாயகனுக்காக அவர் ஒருபோதும் கதை எழுதியதில்லை. 

bh45


தேனி மாவட்டம் அல்லி நகரில் பூத்த அதிசய மலர் பாரதிராஜா. இவர் 17.7.1941ல் பிறந்தார். திரைப்படங்கள் எடுக்க வெளிப்புறப்படப்பிடிப்புக்குச் சென்ற பெருமைக்கு உரியவர் இவர்தான். பெரும்பாலான படங்கள் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அதேவேளை கிராமிய மணம் கமழும் படமாகவே இருக்கும். இவர் இளையராஜாவுடன் இணைந்து மனது மறக்காத பாடல்களைத் தந்தவர். கார்த்திக், ராதிகா, ராதா, ரேகா, ரேவதி, ரஞ்சிதா, விஜயசாந்தி போன்ற நடிகைகளை அறிமுகப்படுத்தினார். துணைநடிகர்களாக ஜனகராஜ், வடிவுக்கரசி, சந்திரசேகர், பாண்டியன், நெப்போலியன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். 

manoj

பெரியமாயத்தேவர் - கருத்தம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் பாரதிராஜா. சந்திரலீலாவை மணந்து கொண்ட இவருக்கு மனோஜ், ஜனனி என இரு பிள்ளைகள். 

கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராக பாரதிராஜா தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பி.புல்லையா, எம்.கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி மற்றும் ஏ.ஜெகந்நாதன் ஆகியோருக்கு உதவினார். பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. 

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், டிக் டிக் டிக், மண் வாசனை, முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்கள் பாரதிராஜாவின் வெற்றிக்கு உதாரணங்கள். வேதம்புதிது, அலைகள் ஓய்வதில்லை, கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை ஆகிய படங்கள் இவரது திறனுக்குச் சான்று. இவற்றில் 1996ல் வெளியான அந்திமந்தாரை படம் தேசிய விருதை வாரி வழங்கியது. 2001ல் வெளியான கடல் பூக்கள் இவருக்கு தேசிய விருதைக் கொடுத்தது. கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜா நடித்து அசத்தியிருப்பார்.

krp

பாண்டிய நாடு, குரங்கு பொம்மை ஆகிய படங்களிலும் நடித்து தன் திறமையை நிலைநாட்டியிருப்பார். தாஜ்மகால் படத்தில் தன் மகன்; மனோஜை அறிமுகப்படுத்தினார். மண்ணுக்குள் வைரம், வண்டிச்சோலை சின்ராசு, வானவில், குருபார்வை ஆகிய படங்களை இயக்கியவரும் இவர் தான். 2004ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 4 முறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். மாநில அரசின் விருதுகளை 6 முறை பெற்றார். 1981ல் தனது சீதாகொகா சிலுகா படத்திற்காக நந்தி விருதையும் பெற்றார். விஜய் விருதுகளை 2 முறை பெற்றார். 

பாரதிராஜாவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  

From around the web

Trending Videos

Tamilnadu News