Connect with us
shrutika

Bigg Boss

இந்தி பிக்பாஸில் நடந்த களேபேரம்… அடித்துக்கொண்ட பெண் போட்டியாளர்கள்..கதறி துடித்த ஸ்ருதிகா…

Shrutika: தமிழ் நடிகையாக இருந்த ஸ்ருதிகா இந்தி பிக்பாஸில் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறார். தற்போது அவர் சக போட்டியாளருடன் சண்டையிட்டு கதறும் சம்பவம் நடந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசன் ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க: Viduthalai part2: விடுதலை2 டிரைலரில் விஜயை சீண்டிய வெற்றிமாறன்… இதெல்லாம் நியாயமா கொதிக்கும் ஃபேன்ஸ்…

இது ஒரு புறம் இருக்க இந்தி பிக் பாஸ்ஸில் முதல் முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த நடிகை ஸ்ருதிகா உள்ளே சென்றார். பொதுவாக ஸ்ருதிகா துருதுருவென இருக்கும் ஒரு பெண்தான். ஆனால் அது பலருக்கு கேமரா முன் நடிக்கிறாரோ என சந்தேகம் வந்தது.

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது இதுதான் இவருடைய உண்மையான குணம் என பலரும் அறிந்தனர். இடைத்தொடர்ந்து இந்தி பிக் பாஸ்ஸில் உள்ளே நுழைந்த ஸ்ருதிகா மிகச் சிறப்பாக விளையாடினார்.

கேள்விகள் கேட்க வேண்டிய இடத்தில் அசால்டாக கேட்டும், டாஸ்குகளை செய்தும் வலுவான போட்டியாளராக தற்போது இந்தி ரசிகர்களிடம் புகழ்பெற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவிற்கு கரண்வீர், ஷில்பா மற்றும் சும் என நண்பர்கள் வட்டத்தை அமைத்து கொண்டார்.

இதையும் படிங்க: நீங்க வேற லெவல்!.. அது என்னால முடியாது!.. பார்த்திபனுடன் நடிக்க மறுத்த ரஜினி!..

தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் ஸ்ருதிகா புரோமோ தமிழ் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஸ்ருதிகாவிற்கு ஆறுதலாக ட்வீட் போட்டும் வோட்டு போடவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

புரோமோவிற்கு: https://x.com/BB24x7_/status/1861438929917923595/video/1

 

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top