×

ஹிந்தி பட வாய்ப்பு வந்தா சர்ட்டையை கழட்டிடுவாங்க... நடிகை ஆர்த்திக்கு இது தேவையா?...

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் #ஹிந்தி_தெரியாது_போடா என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. 2 லட்சம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியதால் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. 

மேலும், ஹிந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் என பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்களை உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, யுவன் சங்கர் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அணிந்து போஸ் கொடுக்க டிவிட்டரே அதகளமானது. இது பாஜக ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.எனவே ‘திமுக வேண்டாம் போடா’ என்கிற ஹேஷ்டேக்கை கையில் எடுத்து டிரெண்டிங் செய்ய துவங்கினர்.

இந்நிலையில், நடிகை ஆர்த்தி ஹிந்தி மொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். டிவிட்டர் பக்கத்தில் ‘நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு..அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை’ என பதிவிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து நெட்டிசன்களில் சிலர் அவரை திட்ட, பதிலுக்கும் அவரும் திட்ட டிவிட்டர் களோபரமாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News