×

இந்து மதத்தைப் பார்த்து சிரித்தவர்கள் இப்போது சிந்திக்கிறார்கள் – நடிகை பிரணிதாவின் வைரல் பதிவு !

நடிகை பிரணிதா இந்து மக்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்து சிரித்தவர்கள் இப்போது சிந்திக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

 

கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் ஒருவரை தொட்டுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைகுலுக்குவதற்குப் பதிலாக இந்திய முறைப்படி கையெடுத்து கும்பிடுகிறார்கள். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பே இந்திய முறைப்படி வணங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னணி நடிகையான பிரணிதா ‘இந்து மக்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்ததைப் பார்த்து சிரித்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் இந்துக்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதைப் பார்த்து சிரித்தார்கள். அதேப்போல விலங்குகளையும், மரங்களையும் காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். இந்துக்களின் சைவ உணவுப்பழக்கம், யோகா ஆகியவற்றைப் பார்த்து சிரித்தார்கள். இறந்தவர்களை எரிப்பதை பார்த்து சிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிறகு குளிப்பதை பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. மாறாக சிந்திக்கிறார்கள். இந்த பழக்கம் தான் கொரோனா பரவாமல் தடுக்கிறது. இது மதம் இல்லை. வாழ்க்கையின் வழி.’ என சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News