×

ஹாலிவுட் நடிகர் தோற்றத்தில் செல்வராகவன்.. டிரெண்டிங் வீடியோ....
 

இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் செல்வராகவன்.

இவருக்கென தனி ரசிகர்கள் வட்டாரம் உண்டு. இப்போதும் இவரிடம் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது இயக்குவீர்கள் என தொடர்ந்து பலரும் நச்சரித்து வருகின்றனர்.

தற்போது படப்பிடிப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வாழ்க்கை தத்துவங்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், தனது முகத்தை தனது மனைவி என்ன செய்து வைத்திருக்கிறார் பாருங்கள் எனப்பதிவிட்டு ஒரு வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பைரட்ஸ் ஆப் கரிபியன் படத்தில் ஜாக் வேடத்தில் நடித்த ஜானி டேப்பின் கெட்டப்பில் அவர் மாறி இருக்கிறார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News