Venkat Prabhu: பொதுவாக கோலிவுட் படங்கள் தான் ஹாலிவுட் பட போஸ்டரை காப்பி அடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் வெங்கட் பிரபுவின் ஒரு படத்தின் போஸ்டரை ஹாலிவுட்டில் காப்பி அடித்த கதை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் கூட அந்த படத்தின் காப்பி என்ற கதையை தான் பார்க்க முடிந்தது. காலம் மாற மாற இதை ரசிகர்கள் எழுதாகவே கண்டுப்பிடித்து விடுகின்றனர். அது சினிமா கதையில் தொடங்கி தற்போதைய காலத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரை காப்பி மயமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: மணிரத்னத்தை இப்படியா அவமானப்படுத்துறது? ‘ரோஜா’ படத்தில் இளையராஜா காட்டிய ஆட்டியூட்!
கோலிவுட்டின் பல இயக்குனர்கள் மொத்த பட கதையை காப்பி அடித்ததும் வழக்கமாக இருக்கிறது. அதிலும் அட்லீ இயக்கத்தில் வெளியாகும் படங்கள் சூப்பர்ஹிட் தமிழ் படங்களின் காப்பியாகவே உருவாகிறது. மேலும், ஹாலிவுட் படத்தின் கதையை மையமாக வைத்து முன்னணி நாயகர்களின் மொத்த படத்தினை முடித்து விடுகின்றனர்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படமும் தி ஜெமினிமேன் என்னும் ஹாலிவுட் படத்தின் காப்பி என்றே கூறப்படுகிறது. இப்படி கோலிவுட்டினர் காப்பி அடித்தது போக கோலிவுட்டையே காப்பி அடித்துள்ளார்கள் என்ற கதை தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!…
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவை மட்டும் வைத்து ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கும். தற்போது அந்த போஸ்டரை அப்பட்டமாக வைத்து டார்க் மாஸ்டர் என்ற ஹாலிவுட் திரைப்படம் காப்பி அடித்து இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஜெயம் ரவி…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…