×

சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீர் - 46 பேருக்கு கொரோனா
 

சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீர் மூலமாக கொரோனா வைரஸ் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் மட்டும் 81 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென் கொரியா சியோங்னமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 8ம் தேதி கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு. அதில் 90 பேர் கலந்து கொண்டனர். அதன்பின் அனைவருக்கும் புனித நீர் வழங்கப்பட்டது. அந்த புனித வாய்க்குள் படும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர், அதில் கலந்து கொண்ட பலருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. சோதனையில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புனித நீரை பாதிரியார் கிம் தனது கையால் தொட்டு வாயில் ஊற்றியதால் அதன் மூலம் கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. எனவே, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ள கிம், தானே எல்லா பழியையும் ஏற்றுக்கொள்கிறேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News