கே.ஜி.எஃப், சலார் வரிசையில் அடுத்த பிரம்மாண்டம்.. மகா அவதார் பரசுராம் ஃபர்ஸ்ட் லுக்!
Apr 19, 2026, 20:42 IST
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான படைப்புகளுக்கும், தரமான கதைக்களங்களுக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையானது 'ஹொம்பாலே ஃபிலிம்ஸ்'). கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பான்-இந்திய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும், ராஜகுமாரா மற்றும் சமீபத்திய 'மகா அவதார் நரசிம்மா' போன்ற மாபெரும் வெற்றிப் படங்களையும் தயாரித்த இந்த நிறுவனம் தற்போது மக அவதார் பரசுராம் என்ற பிரஆண்ட படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படம் டிசம்பர் 2027-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான காட்சி அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
