×

வீட்டு வேலை செய்யும் பிரபல நடிகையின் காமெடி கலாட்டா!

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் அதே நிலைமை தான். 

 

பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உறவாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது மிகவும் வைரலாகி  வருகிறது.

'இறுதிச்சுற்று' படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திகா சிங். இவர் நிஜ குத்து சண்டை வீரர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'ஓ மை கடவுளே' படம் பிளாக் பஸ்டர் ஆனது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவரை, தாயார் துணி துவைக்க சொல்ல, 

அவரோ பாட்டு பாடிக்கொண்டே செம ஜாலியாக வேலை செய்கிறார். மேலும் அவர் " என்னை வேலை செய்ய சொன்னா இதுதான் நடக்கும்" என்று காமெடியாக அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை நீங்களே பாருங்க..

From around the web

Trending Videos

Tamilnadu News