×

சூடுபிடிக்கும் போதை மருந்து விவகாரம்... நிக்கி கல்ராணி தங்கை வீட்டில் சோதனை....

 

பாலிவுட்டுக்கு அடுத்து கன்னட திரையுலகில் போதை பொருள் புலங்குவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இவரை கைது செய்த போலீசார் இவரிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை சென்னை அழைத்து வந்தும் விசாரணை செய்ய கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

எனவே, பல நடிகர், நடிகைகள் போதை மருந்து விவகாரத்தில் சிக்குவார்கள் என்கிற பீதி எழுந்துள்ளது.

இந்நிலையில், மலையாளம், தமிழிலில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சானா கல்ராணி வீட்டிலும் இன்று காலை போலீசார் சோதனை செய்தனர். இவர் தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News