பாக்யராஜின் காலில் அழுது உருண்ட பாண்டியராஜன்.. பின்னாடி இப்படி ஒரு சென்டிமென்ட் டிராமா இருக்கா..
பாண்டியராஜன் அறிமுகம் :
கீர்த்தி சிறுசா இருந்தாலும் மூர்த்தி பெரிதாக இருக்க வேண்டும். அப்படி உயரம் குள்ளமாக இருந்தாலும் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் தன்னுடைய தனித் திறமையால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் பாண்டியராஜன். இவரின் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம், ஊரை தெரிஞ்சுகிட்டேன், பாட்டி சொல்லை தட்டாதே, கதாநாயகன் போன்ற படங்கள் இவரின் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது.
காமெடி கலக்கல் :
குறிப்பாக காலம் மாறி போச்சு திரைப்படம் இவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது. குடும்ப நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை வீ சேகர் இயக்கியிருப்பார் .மேலும் பாண்டியராஜனுடன் சங்கீதா, வடிவேலு, கோவை சரளா, ஆர்.சுந்தர்ராஜன் போன்றோர் நடித்திருப்பார்கள்.
அதன்பின் காணாமல் போன பாண்டியராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்தின் ’எங்கள் அண்ணா’ படத்தில் நடித்தார். பிரபுதேவாவின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் வடிவேலுவுடன் இவர் செய்யும் காமெடி கலாட்டா இன்று பார்த்தாலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
அதன் பிறகு அஞ்சாதே திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
வாய்ப்பு தேடி பயணம் :
இந்நிலையில் பாண்டியராஜன் கேமரா முன் வருவதற்கு முன்னாடி நடிகர் இயக்குனருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக இருந்துள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி பல கம்பெனிக்கு அலைந்துள்ளார். ஆனால் இவரது உயரம் காரணமாக நிராகரிக்கப்பட்டார். அதன் பின்னரே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். இந்நிலையில் பாக்யராஜுடன் உதவியகுனராக எப்படி சேர்ந்தார் என்ற சுவாரஸ்ய கதையை பார்கலாம்.
பாக்யராஜ் படத்தை பார்த்து சினிமா ஆசை வந்து வாய்ப்பு தேடி சென்றுள்ளார். எப்படியோ பாக்யராஜ் டீமில் சேர்ந்து அவரின் உதவி இயக்குனர்களுக்கு எடுபுடி வேலை எல்லாம் செய்துள்ளார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். ஒருமுறை மௌன கீதங்கள் படப்பிடிப்பின் போது கிளாப் அடித்து விட்டு ஒளிந்து கொண்டுள்ளார்.
பாக்யராஜ் காலில் விழுந்த பாண்டியராஜன் :
உன்னை யார் கிளாப் அடிக்க சொன்னது என்று பாக்கியராஜ் திட்டியதும் அவர் காலில் விழுந்து ’நான் அப்பா இல்லாத பையன் சார் எப்படியாவது எனக்கு தொழில் கற்றுக் கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். பாக்யராஜும் சரி என்று உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டுள்ளார். தொழில் நூணுக்கங்களை கற்றுக்கொண்ட பாண்டியராஜ் பின்னர் தனது 26 வது வயதில் கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
பாண்டியராஜனுக்கு மார்க்கெட் போனதற்கு முக்கிய காரணமே அவர் படங்களில் நடித்தால் அவராகவே தெரிவார். மேலும் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என எதிலும் வேறுபாட்டை காட்ட மாட்டார். எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாக நடிப்பார். அது மட்டும் இல்லாமல் அவருக்கு பொருந்துற மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பார். இன்று அவரை விட திறமையான நடிகர்கள் தமிழ் சினிமாவில் படை எடுத்ததால் பாண்டியராஜன் காணாமல் போய்விட்டார்.
