×

சி எஸ் கே அணியில்  13 பேருக்குக் கொரோனா பரவியது எப்படி?

துபாயில் இருக்கும் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

 

துபாயில் இருக்கும் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு தனிமைப்படுத்திக் கொண்ட சி எஸ் கே அணியில் ஒரு பவுலர் உட்பட மொத்தம் 13 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட அவர்களுக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

துபாய்க்கு செல்வதற்கு முன்னதாக சென்னை அணி வீர்ரகள் ஐந்து நாட்கள் சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பரவி இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News