×

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது? - இத்தாலி அரசு வெளியிட்ட வீடியோ

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 162 நாடுகளில் பரவியுள்ளது. மொத்தமாக 2 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்து இத்தாலியும், ஈரானும் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
 

இத்தாலியில் இந்நோயால் 2158 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 23,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இத்தாலி அரசு அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சில இடங்களில் மருத்துவர்களுக்கும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது.

எனவே, இதை தடுப்பதற்காக இத்தாலி அரசு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதை பார்க்கும் போது கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எப்படி பரவுகிறது, சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நோயாளிகளை தொடும்போது அது எப்படி அவர்களையும் பாதிக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News