×

தோளபட்டையில் அடிபட்ட அஸ்வின் இப்போது எப்படி இருக்கிறார்… அவரே தெரிவித்த தகவல்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் தோள்பட்டையில் பலத்த அடி காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே விலகினார்.

 

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் தோள்பட்டையில் பலத்த அடி காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே விலகினார்.

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஐபிஎல் தொடரில் கலக்கிய சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவர். சென்னை அணி தொடர்ந்து இருமுறை கோப்பை வெல்ல மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரை சென்னை அணி கழட்டிவிட்டது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் தற்போது அவர் தனது காயம் குறித்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் ‘மைதானத்தை விட்டு வெளியேறும்போது வலி இருந்தது. ஆனால் இப்போது வலி இல்லை. மேலும் ஸ்கேன் ரிப்போர்ட்களும் சாதகமாக வந்துள்ளன’ எனத் தெரிவித்துள்ளார். இது அஸ்வின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News