Dude: சிங்கராக மாறிய பிரதீப்!.. Dude சிங்காரி லிரிக் வீடியோ எப்படி இருக்கு?…
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து 3 வருடங்கள் கழித்து ஒரு கதை எழுதி அந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்தார். அப்படி வெளியான லவ் டுடே திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.
8 கோடி செலவில் உருவான அந்த திரைப்படம் 80 கோடி வரை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. அதோடு இந்த படம் தெலுங்கிலும் நல்ல வசூலை பெற்றது. ஹீரோவாக பிரதீப் வெற்றி பெற்றதால் அவரை வைத்து படம் எடுக்க மற்ற இயக்குனர்களும் முன்வந்தார்கள். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்து வெளியான டிராகன் படம் அசத்தலான வெற்றியை பெற்றது.
மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் LIK. இது ஒரு ஃபேண்டஸி திரைப்படமாகும். ஒருபக்கம் கீர்த்தீஸ்வரன் என்பவரின் இயக்கத்தில் Dude என்கிற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வந்தார். தற்போது Dude திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘சிங்காரி’ என்கிற பாடலை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த பாடலை பிரதீப் ரங்கநாதனே பாடியிருக்கிறார்.
லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவர் தனுஷ் போலவே நடிப்பதாக சொன்னார்கள். இந்த கேள்வியை அவரிடமே கூட கேட்டார்கள். தற்போது Dude படத்தில் அவர் பாடியுள்ள ‘சிங்காரி’ பாடலை கேட்கும் போது தனுஷின் குரல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
