Categories: Cinema News latest news throwback stories

உதவி இயக்குனர்கள் போயி முதல்ல இரவின் நிழல் படத்தைப் பாருங்க….பயில்வான் ரங்கநாதன் பளார் விமர்சனம்

இப்போ திரையுலகில் ஆளாளுக்கு புது ட்ரெண்ட்டாக வந்துள்ள அதாவது ஒரே ஷாட்ல படம் முழுவதும் எடுத்த இரவின் நிழல் பற்றித் தான் பேசிக்கிட்டு இருக்காங்க. பார்த்திபனின் கடுமையான உழைப்பு இதுல தெரியுது என்றெல்லாம் ஆர்வமுடன் திரையரங்கிற்கு ரசனை விரும்பிகளின் கூட்டம் செல்கிறது. இதைப்பற்றி ஆளாளுக்கு ஒரு விமர்சனம் சொல்றாங்க. நம்ம பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…!

payilvan ranganathan

90 நிமிட படம் ஒரே டேக்கில் எடுக்க வேண்டும். இது வெளிநாட்டு படங்கள்ல சாத்தியமாயிருக்கு. நான் பார்க்கல. இந்தப்படத்துல மேக்கிங் வீடியோவை அரை மணி நேரம் பார்த்திபன் காமிச்சாரு. அப்ப தான் பார்த்திபன் எந்த அளவு முயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் எடுத்துருக்காருன்னு தெரியுது. எடிட்டர் 90 நாள் கூடவே இருக்கணும். ஆடியோகிராபரும் கூடவே இருக்கணும். கேமரா மேன். டைட்டில்ல பார்த்தேன். 30 கேமரா மேன்கள் இருந்துருக்காங்க. ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

parthiban

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அவர் மேக்கிங் வீடியோவில் 10 நிமிஷம் பேசினாரு. அவரு எப்பவுமே அதிகமா பேசமாட்டாரு. இந்தப்படத்தில நிறைய நிமிஷம் பேசிருக்காருன்னா அவரை இந்தப்படம் எந்தளவுக்கு இன்ஸ்பயர் பண்ணிருக்கும்னு நாம தெரிஞ்சிக்கலாம். ஏன்னா என்னோட முதல் பிஆர்ஓ ஏஆர்.ரகுமான்னு சொல்லிருந்தாரு பார்த்திபன். அந்தளவு இந்தப்படம் அழுத்தமாகவும் நம்பிக்கை தரும் பாத்திரமாகவும் இருந்தது.

ஒரு மனிதன் அதுவும் தவறான முறையில் பிறந்த குழந்தை. அவன் எப்படி பிறக்கிறான்? எப்படி வாழ்கிறான்? என்ன தொழில் செய்கிறான்? எப்படி சட்டவிரோதமாக மாறுகிறான்? எப்படி கடைசில வாழ்க்கை முடிகிறது? இதுதான் கதை. ஒரு மனிதன் தன்னோட வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறான். பெரிய கோடீஸ்வரன். அவன் வளர்ந்த விதம் தப்பா இருந்தா எப்படி இருக்கும்?

இந்த உணர்வுகளை பார்த்திபன் நன்றாகப் பிரதிபலிச்சிருக்காரு. என்னைப் பொறுத்தவரையில் பார்த்திபன் இந்தப்படத்துக்கு இரண்டு வருஷத்துக்கு மேல ஒர்க் அவுட் பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன். எல்லா படத்துலயும் பார்த்தீங்கன்னா ஒரு டயலாக் பேப்பர் இருக்கும். அதை டிக் பண்ணிடுவாங்க. நான் நடிகன்கறதால சொல்றேன். ஆனா இதுல அப்படி முடியாது. எந்த ஷாட் எந்த நேரத்துல வரணும். ஒரே நேரத்தில கிட்டத்தட்ட ஒரு 13 செட்டு போட்டுருப்பாருன்னு நினைக்கிறேன்.

iravin nilal

கோயம்பேடு செட்டு வருது, போலீஸ் ஸ்டேஷன் செட்டு வருது, கார் வர்ற செட்டு வருது, போலி சாமியாரோட செட்டு வருது. செட்டுகளுக்கே நிறைய செலவு பண்ணி, கேமரா ஆங்கிள முதல்லயே பிக்ஸ் பண்ணி, அப்புறம் நடிகர் நடிகைகளுக்கு ட்ரெய்னிங் கொடுத்து அடேங்கப்பா விவரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு சிரமப்பட்டிருக்காரு. 30 வயது இளைஞனாக வருகிற பார்த்திபன், பார்த்திபனை விட நன்றாக உணர்ச்சிகளைப் பதிவு செஞ்சிருக்காருன்னு தான் சொல்லணும்.

2 கதாநாயகிகள். அடேங்கப்பா…நம்ம வீட்டு குடும்ப குத்துவிளக்கு மாதிரியே ஒண்ணு. அப்புறம் பார்ப்பனிய பொண்ணு ஒண்ணு. வேற வழியில்ல…வறுமை கோட்டுக்கு கீpழ இருக்கிற ஒரு பார்ப்பனிய வீடு, அப்பங்காரன் பாவம் அவன்ட காசு இல்ல. கல்யாணம் பண்ணியே ஆவணும். கடன் வாங்கிட்டான். கடன் வாங்க நெருக்குறாங்கங்கறங்க போது அந்தப் பொண்ணு ரொம்ப சூப்பரா நடிச்சிருக்கு.

iravin nilal

இன்னொரு பொண்ணு. அவரோட முதல் மனைவி. அதே மாதிரி இதுல வில்லியைப் பார்த்தீங்கன்னா வரலட்சுமி சரத்குமார். ஏன்டா…அவங்கூட வாழ்ந்து குழந்தையை வேற நான் எடுத்துருக்கன்டா…அப்புறம் சொத்து எனக்குத் தான்டா…அந்த வார்த்தை நல்லாருக்கும்.

அதாவது அவனோட வாரிசை என் வயித்துல சுமக்கிறண்டா…உனக்கு எதுக்குடா பணத்தைத் தருவேன்… எனக்குத் தான்டா முக்கியம் … போனா போது. நாய் மாதிரி ஒரு அஞ்சு லட்ச ரூவா தள்ளிட்டுப் போறேன்னு சொல்வார். ஏன்னா அந்த அளவுக்கு நகைகளைக் குவித்து வைத்து இருக்கிறார்

இந்த பிரேமானந்தாங்கற சாமியாரு. இந்தப்படத்துல போலி சாமியாரையும் செம காட்டு காட்டியிருக்காரு பார்த்திபன் சினிமாக்காரன் எல்லாருமே அவசியமா இந்தப்படத்தை காசு குடுத்துப் பார்க்கணும்டா. அப்ப தான் சினிமான்னா என்னன்னு புரியும்.

நான் இனிமேல் வரக்கூடிய உதவி இயக்குனர்களுக்குச் சொல்வது முதல்ல போயி இந்த பார்த்திபன் படத்தைப் பார்த்துட்டு வா…இரவின் நிழல் பார்த்துட்டு வா…அப்போ தான் உனக்கு எந்த இடத்துல கட் பண்ண முடியும்…முடியாதுங்கறது தெரியற அளவுக்கு ஒரு சினிமாவுக்கு ஒரு இலக்கணத்தையும் இரவின் நிழல் படம் மூலம் பார்த்திபன் கொடுத்துருக்காருங்கறது தெரியும். இந்தப்படத்தைப் பொறுத்தவரை அட பார்த்திபனா…பின்னிட்டான்யா….எங்கள் பார்த்திபன்…!

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v