Categories: Cinema News latest news

ரத்தம் படமே நல்லாருக்குதுன்னு சொல்ல வச்சிடாதீங்க விஜய் ஆண்டனி!.. இம்சை பண்ணும் ஹிட்லர் டீசர்!..

இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன், கெளதம் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2, ரத்தம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை சோதித்த நிலையில், அவரது வாழ்க்கையிலும் மகள் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த சோகம் மற்றும் பிச்சைக்காரன் 2 ஷூட்டிங்கில் நடந்த விபத்து என இந்த ஆண்டு முழுக்கவே சோகமயமாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: நெல்சன் கழட்டி விட்டது போல!.. லோகேஷ் கனகராஜும் சிவகார்த்திகேயனை சீண்டவே இல்லையாம்.. எல்லாம் உருட்டா?

ஆனால், மகள் இருந்து ஒரு வாரத்திலேயே ரத்தம் படத்தின் புரமோஷனுக்கு இளைய மகளை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 என காமெடி படங்களை கொடுத்த சி.எஸ். அமுதன் சீரியஸாக எடுத்த படம் ரசிகர்களை சென்று சேரவில்லை.

இதையும் படிங்க: சூர்யா சொந்தக்காரனா சண்டை போடுவீங்க!.. அயலான் தயாரிப்பாளர்னா அடங்கி போவீங்களா சிவகார்த்திகேயன்?

இந்நிலையில், அடுத்ததாக தனா இயக்கத்தில் உருவாகி உள்ள ஹிட்லர் படத்தின் டீசரை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். டீசரில் யார் நடிச்சிருக்கிறார். யார் இருக்கா, என்ன நடக்கிறது என எதுவும் தெளிவாக தெரியாத விதத்தில் கேஜிஎஃப் படத்தில் வரும் ஃபுல் கட் ஷாட் போல சின்ன டீசரிலேயே பல கட்களை போட்டு எரிச்சலைக் கூட்டுகின்றனர்.

கெளதம் மேனன் மற்றும் விஜய் ஆண்டனி மட்டுமே தெளிவாக தெரிகின்றனர். கடைசியாக வரும் அந்த செக் செக் செக் போர்ஷன் சுவாரஸ்யமாக உள்ளது. மற்றபடி அனைத்தும் வழக்கமான படமாகவே தெரிகிறது.  இந்த ஹிட்லராவது இம்சிக்காமல் இருந்தால் சரி என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

Saranya M
Published by
Saranya M