Categories: Cinema News latest news throwback stories

பி.ஆர்.ஓக்களை உருவாக்கியது எம்.ஜி.ஆர் தான்.. சுவாரஸ்ய பின்னணி

தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓக்கள் தற்போது அதிகரித்து இருந்தாலும், இப்படி ஒரு பிரிவை உருவாக்கியது எம்.ஜி.ஆர் தான் என்பது நமக்கு தெரியுமா?

தென் இந்திய திரைப்படங்களின் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்று அனைத்துத் தரப்பு தகவல்களையும் சேகரித்து தருபவர் ஆர்.பி.ஓ. இந்த பழக்கம் தற்போது சினிமாவில் அதிகரித்து இருக்கிறது.

நாடோடி மன்னன் படத்தினை 1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து வந்தார். விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் பத்திரிகைகளுக்கு ஸ்டில்கள் அனுப்புவது அன்றைய வழக்கம். அப்போது அலுவலக மேளாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்துள்ளன. அவரினை காண சென்ற பிலிம் நியூஸ் ஆனந்தன், பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” என்று கேட்டி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர்

வீரப்பனோ ஸ்டில்கள் பத்திரிக்கைக்கு போக வேண்டும். யார் கொடுத்தால் என்ன நீங்களே கொடுங்களேன்” என ஆனந்தனுக்கு ஓகே சொன்னாராம். எல்லா பத்திரிகைகளிலும் நாடோடி மன்னன் ஸ்டில்கள் அடுத்த வாரம் சரியான நேரத்தில் வெளிவந்து வரவேற்பினை பெற்றது. இதை கொடுத்தது ஆனந்தன் தான் என்பது எம்ஜிஆர்ரிடம் சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆனந்தனை பாராட்டினார். இதை தொடர்ந்து அவர் பி.ஆர்.ஓவாக மாறினார். இதுவே பி.ஆர்.ஓ தொழில் உருவாக காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily