Categories: latest news

போனா போது! அதையே நடிக்க வைங்க..சுந்தர் சி அலட்சியப்படுத்திய நடிகை.. யாருனு தெரியுமா?

சினிமாவில் நகைச்சுவையோடு ஒரு கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் சுந்தர் சி. முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக மாறினார். முதல் படம் அவருக்கு வாழ்க்கையையும் கொடுத்தது. அந்தப் படத்தில்தான் குஷ்பூவின் அறிமுகமும் கிடைத்தது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழக ஆரம்பித்து பின் தம்பதிகளாக மாறினார்கள்.

முறைமாமன் படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இப்போது அந்தப் படத்தை பார்த்தாலும் சிரிககாதவர்களே இருக்க முடியாது. கார்த்தியின் இன்னசன்ஸ், கவுண்டமணி – செந்தில் காமெடி என படமுழுக்க நகைச்சுவையை சொட்ட சொட்ட வைத்திருந்தார் சுந்தர் சி.

இதையும் படிங்க: பெரிய போராட்டத்துக்கு பின்னர் சூர்யா – ஆர்ஜே பாலாஜி படத்திற்கு ஓகே சொன்ன ஹீரோயின்…

இந்தப் படத்தில் முதலில் ஹீரோயினை தேடுவதற்குள் ஒரு பாடு பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் பாலகோபி ஒரு பேட்டியில் கூறினார். நிறைய நடிகைகளை பார்த்தும் யாருக்கும் திருப்தி இல்லையாம். அதனால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் சுந்தர் சி யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வாங்கப்பா.. போட்டு கதையை ஆரம்பிப்போம் என்ற மன நிலைக்கே வந்துவிட்டாராம்.

ரம்பா நடித்த கேரக்டருக்கு முதலில் நக்மாதான் பேசப்பட்டாராம். ஆனால் நக்மா அந்த நேரத்தில் ஒரு பெருந்தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அதனால் நக்மாவை இவர்கள் ஓகே சொல்லவில்லை. அதன் பிறகு ரஞ்சிதா, சங்கவி, ரோஜா என அந்த காலகட்டத்தில் மிகவும் பீக்கில் இருந்த நடிகைகளை பேசியிருக்கின்றனர். ஆனால் அப்போது இவர்கள் மிகவும் பிஸியாக இருந்துள்ளனர்.

rampa

இதையும் படிங்க: ஜோதிகா நிஜ வாழ்க்கையில் சந்திரமுகி!.. என்ன பிச்சையா எடுக்குறீங்க?… நாரடித்த சுசித்ரா!…

கால்ஷீட் கிடைக்கவில்லையாம். உடனே சுந்தர் சி ‘ப்பா.. அந்த உழவன் படத்துல நடிச்சிருக்கு பாருங்க.. அதையே நடிக்க வைக்கலாம்’ என ரம்பாவை பரிந்துரை செய்திருக்கிறார். ரம்பா அப்போது உழவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகே ரம்பாவை உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். அந்தப் படத்திற்கு பிறகு ரம்பா இந்த தமிழ் சினிமாவையே தன் கைக்குள் மடக்கிப் போட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தில் அவருக்கான ஓப்பனிங் சாங். இதுவரை எந்த நடிகைக்கும் அப்படி அமையவில்லை. மர்லின் மன்றோ கெட்டப்பில் அவரை காட்டிய விதம் இன்றுவரை அந்த பாடலை ரீமேக் செய்யாதவர்களே இல்லை. ரம்பா என்றாலே அழகிய லைலா என்ற பாடல்தான் அனைவருக்கும் நியாபகம் வரும்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini