Categories: Cinema News latest news throwback stories

வேலைக்கு போகாத கணவன்… கஷ்டத்தில் நடிக்க வந்த சிவாஜி நாயகி… ஒரே ரோலில் ஓஹோ புகழ்…

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தான் தங்களது முதல் படங்களிலே மிகப்பெரிய உச்சத்தினை அடைவர். அவர்களில் நாயகி சௌகார் ஜானகியும் அடங்குவார்.

சினிமா பார்க்கவே அனுமதிக்காத ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர் ஜானகி. வேலை நிமித்தமாக அவரின் சென்னைக்கு வந்தார். ஜானகிக்கும் சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் வேலைக்கு சேர்ந்தார். அப்போ இவரின் குரல் மூலம் சினிமா வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அதை வீட்டில் சொன்னதும் பிரளயமே வெடித்ததாம்.

சௌகார் ஜானகி

அண்ணன், அப்பாவின் கட்டாயத்தின் பேரில் உடனே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் திருமணம் முடிந்ததும் விஜயவாடா கணவருடன் சென்று விட்டார். ஆனால் கணவர் சில நாட்களில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து இருக்கிறார். இதற்குள் ஜானகி கர்ப்பமாகி விட ஆதரவு தேடி தாய் வீட்டினை நோக்கி கணவருடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

ஆனால் அசாமில் அடிக்கடி நிலநடுக்கம் வரும் என்பதால் டெலிவரிக்கு சென்னை வந்திருக்கிறார். குழந்தை பிறந்தும் கணவர் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். தற்போது கொஞ்சம் தைரியமாக கணவரிடமே நான் சினிமாவில் நடிக்கவா எனக் கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அந்த சமயத்தில் ‘சவுகார்’ படத்துக்காக ஆடிஷன் நடந்து இருக்கிறது. வாஹினி ஸ்டூடியோவில் நடந்த ஆடிஷனில் ஒரே டேக்கில் நடித்து காட்டினாராம்.

நாயகி

சில மாதங்கள் கழித்தே இவரின் வீட்டிற்கு எல்.வி.பிரசாத், நாகி ரெட்டி இருவரும் வந்து படம் உறுதியானதை கூறினர். சரி சின்ன கதாபாத்திரம் தான் என நினைக்கும் போது நீ தான் நாயகி என சொன்னபோது அதிர்ந்தே விட்டாராம். இந்தப் படத்துலதான் என்.டி.ராமராவ்வும் அறிமுகமானார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. பிறகு தமிழில் ‘வளையாபதி’ படத்துல அறிமுகமானார்.

தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் குவிய தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். நல்ல அளவில் செட்டில் ஆனவர் தற்போது பெங்களூரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
Shamily