×

ஊரடங்கு தளர்வு...பைக், ஆட்டோ, காருக்கு இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?....

 
bike

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இறைச்சி, மீன், காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்வோர் இ - பாஸ் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆட்டோக்கள், கார்களில் பயணிப்பவர்கள் இ -பாஸ் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இ பாஸ் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் கூடுதலாக வாடகை வாகன பயணத்திற்கு அனுமதி பெறுவதற்கான இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பைக், கார், ஆட்டோக்களுக்கு இ-பாஸ் பதிவு செய்ய புதிய லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் சென்று மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கான உரிய காரணத்தை கொடுத்து இ பாஸ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே பலரும் இ-பாஸுக்கு விண்ணப்பித்தனர். ஒரே நேரத்தில் பலரும் இ -பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ பாஸ் இணையதளம் முடங்கியது குறிப்பிடத்தக்கது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News