×

உலகை அச்சுறுத்தும் கொரோனா எப்படி எதிர்கொள்வது

சீனாவில் மிகவும் முக்கியமான ஊஹான் நகரில் கடல் உணவு விற்பனையகத்திலிருந்து இந்த கொரானா வைரஸ் முதல் முதலாக பரவியது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது வரை சீனாவில் மட்டும் 2500 பேரும் மொத்தம் 3000 பேரும் உயிரழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
 

கொத்து கொத்தாக காணப்படும் கொரோனா வைரஸ்களை மைக்ரோஸ்கோப் வழியே பார்த்தால் மகுடம் போல் காட்சி அளிக்கின்றன, லத்தீன் மொழியில் "கொரோனா" என்பதற்கு மகுடம் எனப் பொருள். அதை குறிக்கவே கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா வைரசை ஆறு வகைகளாக பிரித்துள்ள மருத்துவர்கள் வழக்கமாக விலங்குகளிடையேதான் இவை காணப்படும் என்றும் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் கொலைகார வைரஸாக மாறியது இதுவே முதல் முறை என்றும் கூறுகின்றனர்.

கொரானா வைரஸ் என்றால் என்ன?
ஊஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது. விலங்குகளுடன் சீனவர்கள் நெருக்கமானவர்கள் என்பதால், ஊஹானில் இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கியுள்ளது. 

கொரோனா எப்படி பரவுகிறது?
கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். 

என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள்:

இது வழக்கமான சளித்தொல்லை போல் இருமல், தொண்டை செருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளையும் ஆஸ்துமா அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும், முதியோர்- சிறுவயதினர் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை எளிதில் தொற்றி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருந்து இருக்கிறதா?
கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்காத்துக்கொள்வது?
இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அனுகவும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மூக்கு - வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்வது நல்லது. சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.

From around the web

Trending Videos

Tamilnadu News