Categories: Cinema News latest news throwback stories

நடிப்பதற்காக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா விஜயகாந்த்?… அவர் சொன்னத கேளுங்க!…

விஜயகாந்த் மதுரையிலிருந்து வந்தவர். துவக்கம் முதலே ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க துவங்கியவர். பின்னாளில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர். பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க எவ்வளவு கஷ்டாட்டார் என்பது பலருக்கும் தெரியது. இதுபற்றி அவரே பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எங்கப்பா என்ன நல்லாதான் வச்சிருந்தார். நான்தான் படிப்பை விட்டுட்டு ரைஸ்மில்ல கவனிச்சிட்டு இருந்தேன். எம்.ஜி.ஆர் படங்கள் பார்த்து அவரை போலவே சினிமாவில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்தேன். நடிப்பு ஆசையில அப்பா வச்சிருந்த ரைஸ்மில்ல விட்டுட்டு பொய்சொல்லிட்டு சென்னைக்கு வந்தேன். எனக்கு சரியா தமிழ் பேச வரலைனு சொல்லி ஒரு படத்தில இருந்து என்னை தூக்கிட்டாங்க..

நம்மள வேணாம்னு சொன்னவங்க முன்னாடி நடிச்சி பெரிய ஆள் ஆகணும்னு வைராக்கியத்தோடு முயற்சி செய்தேன். நான் ஏறாத படக்கம்பெனி வாசலே கிடையாது. அப்போ சென்னை பாண்டி பஜாரில் தங்கியிருந்தேன். அங்க இருந்து ஜெமினி வரைக்கும் போவேன். பாக்கும்போது பிரஷ்ஷா இருக்கணும்னு பஸ்ல போவேன். திரும்பி போகும்போது நடந்து போவேன்.

ஊர்ல என்ன சின்ன முதலாளின்னு கூப்பிடுவாங்க. அதையெல்லாம் விட்டுட்டு சினிமாவுல ஒரு இடத்தை பிடிக்கணும்னு பிடிவாதமே இருந்தேன். பல அவமானங்களை சந்திச்சேன். கருப்பா இருக்கேன்னு என்ன நிராகரிச்சாங்க. நீயெல்லாம் நடிக்கணுமான்னு கிண்டல் பண்ணாங்க. எல்லாத்தையும் கேட்டு மனசே கல்லாயிடுச்சு..ஆனாலும் மனசு தளராம முயற்சி செஞ்சிதான் ஒரு இடத்தை பிடிச்சேன்.

என அந்த பேட்டியில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா