ரஜினியின் 'ஜெயிலர் 2' ஷூட்டிங்கில் ஹ்ரித்திக் ரோஷன் எப்போது கலந்து கொள்ளப்போகிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நம்ம 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த். இவர் நடிப்பில் பரபரப்பாக ரெடியாகி வருகிறது 'ஜெயிலர் 2'.
 
jailer 2 rajinikanth hrithik roshan

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நம்ம 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த். இவர் நடிப்பில் பரபரப்பாக ரெடியாகி வருகிறது 'ஜெயிலர் 2'.

ஏற்கனவே, இயக்குநர் நெல்சன் - ரஜினி கூட்டணி அமைத்து இதன் முதல் பாகம் 2023-ல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ஆகையால், பார்ட் 2-வின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக தான் உள்ளது.  

முதல் பாகத்தில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த மலையாள நடிகர் மோகன்லாலும், கன்னட நடிகர் ஷிவராஜ்குமாரும் இதிலும் நடித்துள்ளனர். ஆனால், இம்முறை இன்னொரு கெஸ்ட் ரோலில் நடிக்க பாலிவுட் ஹீரோ ஒருவரை களமிறக்க பக்கா ப்ளான் போட்டுள்ளார் நெல்சன்.

முன்னணி பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் அந்த ரோலில் நடிக்கவிருக்கிறாராம். அவர் படத்தில் ரஜினிக்கு பேருதவி செய்வது போல் ஒரு ஆக்ஷன் காட்சி இருக்கிறதாம். இக்காட்சியை அடுத்த வாரம் மூன்று நாட்களில் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web