Categories: Cinema News latest news

படம் பார்த்துவிட்டு அழுதுகொண்டே கிளம்பி சென்ற வலிமை நடிகை… ஏன் தெரியுமா?…

அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியது. தமிழகத்தில் மட்டும் 700 தியேட்டர்களுக்கும் மேல் இப்படம் வெளியாகியுள்ளது. எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு ஒப்பனிங் காட்சிகளில் கூட்டம் அலை மோதியது. இப்படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் வசூல் குறையவில்லை.

இப்படத்தில் அஜித்துடன் பணிபுரியும் போலீஸ் அதிகாரியாக ஹுமா குரோஷி நடித்திருந்தார். இவர் ஏற்கனவே காலா படத்தில் நடித்தவர். இன்று அதிகாலை 5 மணியளவில் முதல் காட்சியை பார்க்க இவர் சென்னை ரோஹினி தியேட்டருக்கு வந்தார். அப்போது அவருக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.

தியேட்டருக்கு சென்றதும் ரசிகர்களுக்கு கை காட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். படம் பார்த்து முடித்த பின் ரசிகர்கள் தனக்கு கொடுத்த வரவேற்பை கண்டு ஆனந்த கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார்.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா