×

ஆந்திர அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவு தொடர்பாக அம்மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விஷவாயு கசிவு பற்றி விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து மருத்துவர்களிடம் நேரில் விசாரித்த ஜெகன், வாயுக்கசிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். பாதிப்புக்கு உள்ளான கிராமத்தை சேர்ந்த மக்கள் சுமார் 15,000 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும். வாயுக்கசிவால் உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விசாகப்பட்டிணம் தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, விசாகப்பட்டிணம் வாயுக்கசிவு தொடர்பாக உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள உதவி எண்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News