×

காதல் மனைவியை பழிவாங்க கணவன் செய்த கொடூரம்! குழந்தை பரிதாபம்...

பன்னீர்செல்வமும் மீனாவும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் கபிலன் என்ற மகனும் 10 மாத பெண் குழந்தை காவியாவும் உள்ளனர். 
 

இந்த சூழலில் வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழித்து வந்த பன்னீர்செல்வத்தை அழகு மீனா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வம் பத்து மாத கைக்குழந்தையை கொலை செய்யப் போவதாகக் கூறி அப்பகுதியிலுள்ள கிணற்றில் வீசி கொன்று விட்டு, தன் மனைவி தான் குழந்தையைக் கொலை செய்தார் என்று புகார் அளிப்பதற்காக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். 

அங்கு தனது மனைவி ஏற்கனவே புகார் தெரிவிக்க வந்திருப்பதை அறிந்த பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். தப்பிச்சென்ற பன்னீர்செல்வத்தை தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெற்ற மகளை தனது தந்தையே தனது கையால் கொடூரமான முறையில் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News