×

மணிமேகலை பிறந்தநாளிற்கு மாஸ் காட்டிய கணவர்!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. 

 

மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த நாட்களை கழித்து வருகின்றனர்.

அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் அவரது பதிவுகளை ரசிகர்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று தொகுப்பாளினி மணிமேகலைக்கு பிறந்தநாள். இந்த நிலையில் கிராமத்தில் இருக்கும் அவரது கணவர் அங்கிருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து தனது மனைவிக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோவில் மணிமேகலை வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடி இருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News