×

திருமணமாகி ஓராண்டுக்குப் பின் கணவன் சொன்ன வார்த்தை -  மருத்துவமனையில் மனைவி அனுமதி !

திருமணமாகி ஓராண்டு கழிந்த நிலையில் மனைவி அழகாக இல்லை என்று கூறி கணவன் விவாகரத்து கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமணமாகி ஓராண்டு கழிந்த நிலையில் மனைவி அழகாக இல்லை என்று கூறி கணவன் விவாகரத்து கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயநகர் அருகே மாரேனஹள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார் (36). இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்கள் இருவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இப்போது சசிக்குமார் தன் மனைவி அழகாக இல்லை என்று கூறி விவாகரத்துக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட மனைவி அதற்கு மறுப்பு சொல்லவே, இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. சன்டை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஆசிட் வீசி விடுவதாக சசிக்குமார் மனைவியை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகராறு அதிகமாக ஹெல்மெட்டால் அவரைத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜலக்ஷ்மியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து தலைமறைவாக உள்ள சசிகுமாரை தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News