×

நான் விவசாயிதான்.. ஸ்டாலினின் தொழில் என்ன? - விளாசிய முதல்வர்
 

 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் செயலாற்றி வருகிறது.

ஆனாலும், எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிமுக அரசை குறை சொல்லியே அரசியலை நகர்த்தி வருகிறார். சிறப்பாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியை ‘போலி விவசாயி’ என ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று தூத்துக்குடி சென்ற முதல்வர் பழனிச்சாமி அங்கு மக்கள் நிலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘நான் போலி விவசாயி எனில் ஸ்டாலினுக்கு என்ன தொழில்?. நான் விவசாயி என்பது என் சொந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும். சிறு வயது முதலே நான் விவசாயம்தான் செய்து வருகிறேன். நான் கடுமையான உழைப்பாளி என எல்லோருக்கும் தெரியும். ஸ்டாலினின் சான்றிதழ் எனக்கு தேவையில்லை. விவசாயம் பற்றி எதுவும் தெரியாமல் அதில் போலி எது என்பது ஸ்டாலினுக்கு எப்படி தெரியும்? என முதல்வர் கேள்வி எழுப்பினார்.

மேலும், காவேரி குண்டர், மேட்டூர் அணை மற்றும் அத்திகடவு அவினாஷி ஆகிய திட்டங்கள் மூலம் சென்னைக்கான நீர் தேவையை சரி செய்து வருகிறோம். அதேபோல், ஆந்திரபிரதேசம மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து 10 டி.எம்.சி. நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், கேரளா மாநிலத்திடமும் பேசி வருகிறோம். அடிப்படையில்  நான் விவசாயி என்பதால்தான் விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். மேற்கண்ட திட்டங்கள் மற்றும் குடிமராமத்து பணி ஆகியவை தமிழகத்திற்கு தேசிய விருதை பெற்று தந்துள்ளது.

அதேநேரம், திமுக ஆட்சியில் நீர் மேலாண்மை எப்படி இருந்தது என ஸ்டாலின் கூற வேண்டும். ஸ்டாலின் தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார். திமுக ஆட்சியில் ஸ்டாலின் அமைச்சராக இருந்த போதுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. கனிமொழி எம்.பி. அவரின் தொகுதியான தூத்துக்குடிக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. அதிமுக அரசுதான் செய்து வருகிறது. மேலும், தூத்துக்குடிக்காக பல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News