×

எனக்கு விபச்சாரி பட்டம் கட்டுறாங்க...  வேதனையில் சின்மயி

வைரமுத்து விவகாரத்திற்கு பிறகு சின்மயி சர்சைகளுக்கு மிகவும் பெயர் போனவராகிவிட்டார். சமூக வலைதளத்தில் இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் மாறி மாறி வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.   மேலும், ஆண்களின் ஆபாச முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி அசிங்கப்படுத்தி பெண்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கும் , பிரச்னைகளுக்கும் ஆளாகி வருகிறார்.

அந்தவகையில் தனது ட்விட்டரில் " என்னை பலரும் விபச்சாரி என்று அழிகிறார்கள். நான் ஒரு விபச்சாரி என்று அழைக்கப்படுவது பழக்கமாகிவிட்டது; சமூக ஊடக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை ஒரு சேரி என்று அழைத்தவர்கள் ஆண்கள். பல இழிவான கருத்துகளும் ஆண்களிடமிருந்து வந்தவை. ‘எல்லா ஆண்களும் குப்பை' அல்லது ‘ஆண்கள் குப்பை' என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது என கூறி நான்கு மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அதில் ஒருவர் விஸ்வபாரதி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மருத்துவ கல்லூரி மாணவர் என்றும் மற்ற மூவரும் பட்டதாரிகள் அல்லது பட்டதாரி மாணவர்கள் என்றும் கூறியுள்ள சின்மயி தெலுங்கு படிக்க தெரிந்தால் உங்களுக்கு புரியும் என அவர்கள் பேசியுள்ள ஸ்க்ரீன் சாட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதற்கு இணையவாசிகள் சிலர் ஆதரவும் , சிலர் அலட்சியமும் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News