×

நான் உயிரோட இருக்க வனிதாதான் காரணம்.. பீட்டர் பால் வெளியிட்ட வீடியோ...

வனிதா விஜயகுமாரின் பீட்டர் பால் ஒரு உருக்கமான் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 

நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதை அடித்து வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு தினம் தினம் ஒரு பிரச்சனை வருகிறது.

வனிதாவின் கணவர் 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் ‘ நான் உயிரோடு இருப்பதற்கு வனிதாவே காரணம். 2 நாட்கள் என்னை தாய் போல் பார்த்துக்கொண்டார். இப்போதுதான் நான் எவ்வளவு இழந்திருக்கிறேன் என்பது தெரிய வந்தது’ என உருக்கமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News