×

நான் இதற்காகவே வீட்டிலேயே இருக்கிறேன் - மாஸ்டர் நாயகி வெளியிட்ட புகைப்படம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் 500 பேருக்கு மேல் பாதித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

எனவே, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும் எனவும், கூட்டமாக கூடாமல் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுகொண்டார். எனவே,பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் ‘நான் எனது தாய் தந்தைக்காக வீட்டிலேயே இருக்கிறேன்’ என எழுதப்பட்ட காகித்தை கையில் பிடித்த படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News