×

என் வீட்டை மருத்துவமனையாக மாற்றுகிறேன் - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் இந்தியாவில் 500 பேருக்கு மேல் பாதித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்நோய் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.
 

இந்தியாவில் மக்கள் தொகையும், ஜன நெருக்கடி என்பதால் இங்கு பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்க வாய்ப்பிருப்பதாக பலரும் பீதியை கிளப்பி வருகின்றனர். அப்படி பலரும் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் ‘தமிழக அரசு விரும்பினால் தனது வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும், மக்கள் நீதி மய்யத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்’ எனவும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News