×

ரோஜா பட வாய்ப்பை இழந்த பைத்தியம் நான் - மனம் திறந்த பிரபல நடிகை!

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்த ரோஜா திரைப்படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் பாடல்கள் இப்படம்  மிகப்பெரிய வெற்றி அடைய மிக முக்கிய காரணமாக அமைந்தன. மணிரத்னம் இளையராஜா என்ற அசைக்கமுடியாத கூட்டணியை ஏ.ஆர் ரஹ்மான் சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் சற்று அசைத்துப் பார்த்தார்.

 

தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்கள் இருந்தாலும் அரவிந்த்சாமியை போல் ஓர் அழகன் இல்லை என்று மனதிற்குள் பெண்கள் ஏங்கும் அளவிற்கு புத்தம் புதிய நாயகனாக சினிமாவிற்கு அந்த படத்தின் மூலம் ஜொலித்தார் அரவிந்த்சாமி. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாதானாம். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறிய ஐஸ்வர்யா, ‘நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. நீயே உனது முட்டாள்தனம் காரணமாக இழந்துவிட்டாய். அப்போது நான் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். அதனால் இந்த வாய்ப்பை நான் வேண்டாம் என்றேன். ’எப்படி ஒருவர் தேனைக் கொடுக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்வோமோ? அதுபோல’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News