Categories: Cinema News latest news

இது மட்டும் நடக்கலைனா கோயிலே கட்டியிருக்க மாட்டாங்க! குஷ்பூ சொன்ன சுவாரஸ்ய தகவல்

Actress Kushboo:பாலிவுட்tடில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் என கடைசியாக தமிழுக்கு வந்தவர் தான் நடிகை குஷ்பூ. மற்ற மொழி சினிமாக்களை விட தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். கிட்டத்தட்ட80, 90 காலகட்டத்தில் ஒரு கனவு கன்னியாகவே வலம் வந்தார். தமிழில் முதன் முதலில்  ‘தர்மத்தின் தலைவன்’ என்ற படத்தின் மூலம் 1988 அறிமுகமானார் குஷ்பூ.

தற்போது ஒரு அரசியல்வாதியாக தயாரிப்பாளராக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக என பன்முக திறமைகள் கொண்ட ஒரு கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார் குஷ்பூ. அவர் நடித்து புகழ்பெற்ற படங்களாக கருதுபவை வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், வருஷம் 16, சின்னத்தம்பி ,நடிகன் போன்ற படங்கள் ஆகும் .

இதையும் படிங்க: விஜயை ‘வாடா போடா’ என அழைக்க தயங்கிய திரிஷா!.. ஒரு பிளாஷ்பேக்!..

இது இன்று வரை குஷ்புவிற்கு ஒரு பெரிய அடையாளமாக கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் குஷ்புவுக்கு இருந்த மார்க்கெட் வேற எந்த நடிகைகளுக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பால் பின்னிப்பிணைந்திருந்தார் குஷ்பூ. நடிகைகளில் ரசிகர்கள் ஒரு நடிகைக்காக கோயில் கட்டி இருக்கிறார்கள் என்றால் அது குஷ்புவுக்காக மட்டும்தான்.

ஆனால் அது எங்கு இருக்கிறது என யாருக்குமே இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் குஷ்புவின் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது அவர் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் எப்பேர்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். அந்த படத்தை பற்றிய அனுபவங்களை குஷ்பூ அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது சின்னதம்பி படத்திற்கு பிறகு என்னுடைய மார்க்கெட்டே உயர்ந்து விட்டது .ஆரம்பத்தில் இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியாகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை .அது மட்டுமல்லாமல் சின்னத்தம்பி படத்திற்கு முதல் சாய்ஸ் நான் கிடையவே கிடையாது. வேறொரு நடிகை தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. அந்த நேரத்தில் நான்  ‘வருஷம் 16’ போன்ற படங்களில் கொஞ்சம் கிளாமருடன் நடித்துக் கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க: பாடலாசிரியருக்காக சூட்டிங்கையே கேன்சல் செய்த கமல்… இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?

அப்போது வாசு வருஷம் 16 படத்தை பார்த்து சின்னத்தம்பி படத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என சின்னத்தம்பி படத்தின் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளரோ அது கிளாமர் பொண்ணு இந்த படத்திற்கு செட் ஆகாது என சின்னதம்பி படத்தின் தயாரிப்பாளர் சொல்ல வாசுவோ  ‘இந்த படத்தின் இயக்குனர் நான் எனக்கு எது சரியாக இருக்கிறதோ அதைத்தான் செய்ய முடியும். அதனால் குஷ்புவே இந்த படத்தில் இருக்கட்டும்’ என சொன்னாராம்.

அதன் பிறகு தான் குஷ்பூ சின்னத்தம்பி படத்திற்குள் வந்திருக்கிறார் .ஆனால் அந்த படத்திற்கு பிறகு தான் எனக்கு மக்கள் கோயில் கட்டினார்கள். ஏகப்பட்ட புகழ் வந்தது. இன்று வரை எனக்கு என ஒரு அந்தஸ்து இருக்கிறது என்றால் அது சின்னத்தம்பி படத்தில் இருந்து தான் என குஷ்பூ அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் சின்னப் பையன்! எத்தனை தேர்தலை சந்திச்சவன் நான்? சீமானின் தெறிக்கவிட்ட பேச்சு

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini