Rajinikanth
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராகவே வலம் வருகிறார். இவரின் ஸ்டைல், நடிப்பு என அனைவரையும் இன்றளவும் பிரமிக்க வைக்கிறது. 70 வயதானாலும் இன்னும் அதே எனர்ஜியுடன் இருக்கும் சூப்பர் ஸ்டாரை யாருக்கு பிடிக்காமல் இருக்கும்.
அந்த வகையில் நடிகை சரண்யா பொன்வன்னன் ரஜினியை பற்றி ஒரு பேட்டியில் சில விஷயங்களை கூறியிருந்தார். அதாவது ரஜினி என்றால் கொள்ளை பிரியம் என்றும் அவர் மேல் பைத்தியமாக இருப்பேன் என்றும் கூறினார். மேலும் இதுவரை அவர் படத்தில் ஒரு தடவை கூட நடித்ததில்லை.
rajini1
ரஜினி படத்தில் ஒரு சின்ன வேடம் என்றால் கூட போதும் என்று காத்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் மத்தியில் அவர் படத்தில் கேரக்டர் ரோல் கிடைச்சால் கூட நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஏனெனில் அவருக்கு ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றும் எனக்கு அந்த தகுதி இருக்கிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க : 10 பேர்தான் வந்தாங்க… ஷோ கேன்சல்… “துணிவு” படத்துக்கு வந்த சோதனையை பாருங்க…
மேலும் எனக்கு 60 வயசு என்றாலும் அவரும் 60வயசு கேரக்டரிலேயே நடிக்கட்டும், ஆனால் கேரக்டர் ரோலில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறினார் சரண்யா. ஆனால் கமலுடன் நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக முதல் படத்திலேயே நடித்தார்சரண்யா.
rajini saranya ponvanan
இப்பொழுது அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் ஒரே அம்மாவாக மட்டுமே ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சரண்யா பொன்வன்னன். என் தகுதி என்னவென்று எனக்கு தெரியும். அதனால் தான் ரஜினிக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பேன் என்று மிகவும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார் சரண்யா.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…