Connect with us

latest news

நான் சூர்யாவின் மனைவி இல்ல… நயன்தாராவை தொடர்ந்து அறிக்கை விட்ட ஜோ

Jothika: தமிழ் சினிமாவில் இது நாயகிகளின் அதிரடிகாலம் போல. நேற்றில் இருந்து பிரபல நாயகிகள் வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிடுவதை வாடிக்கையாக்கி இருக்கின்றனர். இந்த லிஸ்ட்டில் தற்போது நடிகை ஜோதிகாவும் இணைந்து இருக்கிறார்.

தனுஷ் தன்னுடைய திருமண டாக்குமெண்ட்ரிக்கு நானும் ரவுடித்தான் காட்சிகளையும், பாடலையும் பயன்படுத்த வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாகவும், பிடிஎஸ்ஸாக  பயன்படுத்திய காட்சிகளை எடுக்க கூறி இருக்கும் தனுஷ் தரப்பு  10 கோடி இழப்பீடு கேட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனுஷ் மட்டுமில்ல!. அல்லு அர்ஜூனையும் அசிங்கப்படுத்தும் நயன்!. வைரலாகும் வீடியோ!..

இந்த பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ஜோதிகா இந்த பதிவை நான் ஜோதிகாவாகவும், ஒரு சினிமா காதலராகவும் எழுதுகிறேன். நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல.

சூர்யா, உங்களால் பெருமையாக இருக்கிறேன். நீங்கள் நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் முயற்சி எடுக்கிறீர்கள். படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது. ஆனால் அது சாதாரணமான இந்திய திரைப்படங்களில் நடக்கும் பிரச்னைதான்.

இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வெற்றி பழனிசாமி. ஊடகங்கள் கொடுக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் நான் பார்த்த பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்றவை இடம்பெற்றது.

இதையும் படிங்க: Nayanthara: ‘சின்னவரிடம்’ சென்ற நயன் பஞ்சாயத்து?… தனுஷின் பதில் என்ன?

ஆனால் அந்த படங்களுக்கு இத்தகைய நெகட்டிவ் விமர்சனங்கள் வரவில்லை. கங்குவாவில் பாசிட்டிவே இல்லையா?2ம் பாதியில் பெண்களின் ஆக்‌ஷன் காட்சியும், கங்குவாவுக்கு சிறுவனின் காதலும் துரோகமும்? ரிவியூ செய்யும் போது நல்ல விஷயங்களை மறந்துவிட்டீர்களா? இப்போது இதை ஒருவர் படிக்கும் நம்ப செய்கின்றனர்.

jothika

இந்த படத்தை உருவாக்க குழு எடுத்த முயற்சிக்கு கைதட்டல் கிடைக்க வேண்டிய நிலையில், முதல் ஷோ முடிவதற்கு முன்பே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் கங்குவாவுக்கு குவிய தொடங்கியது வருத்தமளிக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு வேறு எதுவும் செய்யவில்லை!

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top