×

எனக்கு பயோபிக்கெல்லாம் வேண்டாம்... ஆள விடுங்க சாமி... தெறித்து ஓடிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தடகள வீராங்கனை சாந்தி பயோபிக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். 
 
எனக்கு பயோபிக்கெல்லாம் வேண்டாம்... ஆள விடுங்க சாமி... தெறித்து ஓடிய ஐஸ்வர்யா ராஜேஷ்

எல்லா மொழிகளுமே ஒவ்வொரு காலத்தில் ஒரு ட்ரெண்டை பாலோ செய்வர். அந்த வகையில், பேய் ட்ரெண்ட் என எல்லாம் சமீபத்தில் முடிந்தது. தற்போது பயோபிக் ட்ரெண்ட் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மறைந்த பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கை படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் எ.எல்.விஜயும், தி அயர்ன் லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினியும் இயக்கி வருகின்றனர். கங்கனா ரனாவத் மற்றும் நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடித்து வருகின்றனர்.

தொடர்ந்து, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை மகாநதி என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதில் கீர்த்தி சாவித்ரியாகவே வாழ்ந்து, தேசியவிருது வரை தட்டி சென்றார். மேலும், நடிகை சவுந்தர்யா, இயக்குனர் விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையும் படமாக்கப்பட உள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் பயோபிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரின் தடகள வாழ்க்கையை வெளியுலகிற்கு காட்டினால் கண்டிப்பாக பலருக்கு உத்வேகமாக இருக்கும் என்பதால் இப்படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு தவப்புதல்வி எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அறிமுக இயக்குனர் ஜெயசீலன் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். புதுக்கோட்டையில் சாந்தி வாழ்ந்த கிராமத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சாந்தி சௌந்தராஜனாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை ஐஸ்வர்யா தரப்பில் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்கள். அவர் யாருடைய பயோபிக்கிலும் நடிக்கவில்லை அவரின் பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News