×

நான் வனிதாவோட 5-வது புருஷனா - நாஞ்சில் விஜயன் காட்டம்!

வனிதாவின் திருமண விவகாரம் நாளுக்கு நாள் எதாவது பிரச்சனையை கிளப்பி விட்டு சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூர்ய தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கும், சூர்யா தேவிக்கும் தொடர்பு இருப்பதாக வனிதாவின் லாயர் பேட்டி ஒன்றில் கூறினார்.

 

மேலும், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட டிக்டாக் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இதை கேட்டு கடுப்பான நாஞ்சில் விஜயன், " எனக்கு சூர்ய தேவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் பிரபலம் என்பதால் என்னை சந்தித்தபோது சூர்யதேவி என்னுடன் அந்த வீடியோவை எடுத்துக்கொண்டார். இந்த விஷயத்தை வைத்து என்னை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

அப்படி பார்த்தால் நான் வனிதாவுடன் கூட போட்டோ எடுத்துள்ளேன். அப்போ நான் வனிதாவின் ஐந்தாவது புருஷனா...? கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு வனிதாவுக்கு தகுதியே கிடையாது. வனிதா எவ்வளவு மோசமான பொம்பளை எனபது எனக்கு தெரியும். கேரவனில் அமர்ந்து அவர் சரக்கு அடித்து விட்டு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவர் வனிதா. அவ்வளவு ஏன் வனிதா குடித்து விட்டு கும்மாளம் அடித்த வீடியோக்கள் என்னிடம் உள்ளது நான் காட்டவா அதையெல்லாம்.... என பேசி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

From around the web

Trending Videos

Tamilnadu News