×

என் வாழ்க்கையில் இதை மட்டும் மறக்க முடியாது... கண்கலங்கிய சரத்குமார்!

சமீபத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் மனைவி ராதிகா இருவரும் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் முன்பாக லைவ் வந்தனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டுவந்து சரத்குமார் திடீரென்று கண் கலங்கினார்.

 

சிரஞ்சீவி பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் இவ்வாறு உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறும்போது "ஒரு கடினமான கட்டத்தில் நான் சிரஞ்சீவியுடன் கட்டாயம் ஒரு படம் செய்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். ஒருநாள் ஷூட்டிங்கின் போது அவரிடம் என்னுடைய சூழ்நிலையை பற்றி பேசினேன். பின்பு இருவரும் உணவு அருந்தினோம்.

உணவு அருந்தி முடித்த கையோடு அவர் அந்த படத்திற்கு ஒப்புக்கொண்டார். சம்பளம் பற்றி பேசிய பொழுது, அதை எல்லாம் பின்பு பார்த்துக்கொள்ளலாம். என்று கூறிவிட்டார் அவரது மனது யாருக்கும் வராது. அவர் ஒரு சிறந்த மனிதர்" என்று கண்கலங்கினார். மிகவும் உருக்கமான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News