×

அஜித்தை என்னால் போட்டுத்தள்ள முடியாது: அருண்விஜய் பேட்டி

சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் ஒன்றிய அருண்விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய வில்லன் கேரக்டர் உள்ளது. அதில் எந்த வில்லன் கேரக்டரை உங்களால் போட்டுத் தள்ள முடியும்
 

சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் ஒன்றிய அருண்விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய வில்லன் கேரக்டர் உள்ளது. அதில் எந்த வில்லன் கேரக்டரை உங்களால் போட்டுத் தள்ள முடியும் என்று கேட்கப்பட்டது. ஒன்று ’மங்காத்தா’ படத்தில் இடம்பெற்ற விநாயக் மகாதேவன். இன்னொன்று ’தனி ஒருவன்’ படத்தின் சித்தார்த் அபிமன்யூ. இந்த இரண்டு கேரக்டர்களுக்கு நாயகனாக நீங்கள் நடித்தால் யாரை போட்டு
தள்ளுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது 

இந்த கேள்விக்கு பதிலளித்த அருண் விஜய் அஜித் நடித்த விநாயக் மகாதேவன் கேரக்டரை நம்மால் போட்டு தள்ள முடியாது. அவர் பலம் வாய்ந்த நபர்./ வேண்டுமென்றால் சித்தார்த் அபிமன்யுவை போட்டுத் தள்ளலாம் என்று கூறினார். சித்தார்த்தாக நடித்த அரவிந்த்சாமி எனது நண்பர் என்றும் எனவே இந்த பதிலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் விநாயக் மகாதேவனை நெருங்கவே முடியாது என்றும் அவரை போட்டுத்தள்ள யாராலும் முடியாது என்றும் அருண்விஜய் கூறினார்.

ஏற்கனவே அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தான் அருண்விஜய் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனார் என்பதும் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்க அந்த படம் தான் முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News